/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.ஜ., பிரமுகர் கார் எரிப்பு 'வைரல்'
/
பா.ஜ., பிரமுகர் கார் எரிப்பு 'வைரல்'
ADDED : ஆக 11, 2025 04:27 AM
எழுமலை: எழுமலை அருகே பா.ஜ., பிரமுகர் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் மீது, பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்ற காட்சிகள் வீடியோவாக வைரலானது.
எழுமலை அருகே பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தர்மராஜா 55. திருமங்கலத்தில் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். பா.ஜ., விவசாயப்பிரிவு மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் தனது காரை ஜூலை 13 ல், வீட்டின் முன்பு நிறுத்தி துாங்கிக் கொண்டிருந்தார்.
டூ வீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர் காரின் மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர். கார் தீப்பற்றி எரிந்ததில் டயர்கள் வெடித்து சத்தம் கேட்டு வீட்டில் இருந்த பணியாளர்கள் கூச்சலிட்டனர். பதற்றத்துடன் ஓடி வந்த தர்மராஜா உள்ளிட்டோர் தீயை அணைத்தனர். டி.ராமநாதபுரம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் டூ வீலரில் வந்து கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துச் செல்லும் நபர்கள் குறித்த சி.சி.டி.வி., காட்சிகள் நேற்று வீடியோவாக பரவியது.