/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்வித் திறனே வளமையான இந்தியாவை உருவாக்கும் பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி பேச்சு

ADDED : ஏப் 03, 2025 04:39 AM
திருப்பரங்குன்றம்: ''மாணவர்களின் கல்வித் திறனே நாட்டின் வளர்ச்சி, ஒற்றுமை, வளமையான இந்தியாவை உருவாக்கும்'' என
பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி பேசினார்.
மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் தேர்தல் எழுத்தறிவு சங்கம் சார்பில் வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் பா.ஜ., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார்.
இதில் தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி பேசியதாவது:
ஓட்டளிப்பது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். மாணவர்களின் கல்வித் திறன், நாட்டின் வளர்ச்சி, ஒருங்கிணைந்த ஒற்றுமை, வளமையான இந்தியாவை உருவாக்கும். பெற்றோர், உங்கள் கனவை நனவாக்க தளராத முயற்சி வேண்டும்
ஒரே நாடு, ஒரே தேர்தலால் நாட்டில் பல்வேறு வளர்ச்சி ஏற்படும். அடிக்கடி நடத்தும் தேர்தல்களால் ஏற்படும் செலவு தொகையை இளைஞர் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, சமூக முன்னேற்றம், வேலை வாய்ப்பு அதிகரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடைய பயன்படுத்தலாம். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி பலமடங்கு உயரும்.
இந்தியா மாபெரும் வளர்ச்சியடைய ஒரே நாடு ஒரே தேர்தல் முதல் படி ஆகும். எனவே இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன், தேர்வு கட்டுப்பாட்டாளர் துரைராஜ் கலந்து கொண்டனர். பேராசிரியர் சித்து நன்றி கூறினார்.