ADDED : பிப் 19, 2026 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பட்டியல் சமூக மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு தவறாக பயன்படுத்தியதாகக்கூறி மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் அலெக்ஸ் பாண்டியன், மணிகண்டன், மலைச்சாமி தலைமை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துமாரி, திருப்பதி முன்னிலை வகித்தனர். பா.ஜ.,மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன், மாவட்டத் தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, ராஜசிம்மன், பழனிவேல் சுவாமி, கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மகா சுசீந்திரன் பங்கேற்றனர்.

