தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எஸ்.சி., ஓட்டுகளை குறிவைக்கும் பா.ஜ.,

எஸ்.சி., ஓட்டுகளை குறிவைக்கும் பா.ஜ.,

எஸ்.சி., ஓட்டுகளை குறிவைக்கும் பா.ஜ.,


ADDED : ஜூன் 24, 2025 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2025 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகம் முழுதும் எஸ்.சி., சமூகத்தினரின் ஓட்டுகளை அதிகம் பெறுவதற்கு, அவர்களை மத்திய அரசின் திட்டங்களில் பயனாளிகளாக சேர்க்குமாறு, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை, கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக மக்கள் தொகையில், 20 சதவீதம் மேல் பட்டியல் சமூகத்தினர் வசிக்கின்றனர். உள்ளாட்சி பதவிகளில் தலைவர்களாக இருக்கும் எஸ்.சி., சமூகத்தினர் பலருக்கு, சுதந்திர தினம், குடியரசு தினத்தின்போது, தேசியக்கொடி ஏற்றுவதற்கு கூட வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. தி.மு.க., ஆட்சியில், எஸ்.சி., சமூகத்தினர் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.எனவே, தமிழகம் முழுதும் எஸ்.சி., சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, அவர்களின் தலைவர்களை சந்தித்து குறைகளை கேட்டறியுமாறு, பா.ஜ., நிர்வாகிகளை கட்சி மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள மக்களை பார்த்து, மத்திய அரசின் திட்டங்களில் பயன் அடைந்துள்ளனரா என்பதை கேட்டறிந்து, மத்திய அரசின் காப்பீட்டு திட்டம், வீடுகளுக்கு குழாயில் சுத்தமான குடிநீர் திட்டம், இலவச கழிப்பறை திட்டம், 'முத்ரா' கடனுதவி போன்ற திட்டங்களில் பயனாளிகளாக சேர்க்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, தேவைப்படும் உதவிகளை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us