ADDED : ஜன 03, 2025 02:01 AM
மேலுார்: முல்லைப் பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் நல சங்கத்தினர் மேலுார் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க  ஏலத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேலுாரில் ஜன.7ல்  நகை, ஜவுளி, பாத்திரம் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் அடைப்பது, நரசிங்கம்பட்டி முதல் மதுரை தல்லாகுளம் வரை நடைப் பயணமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு விவசாய சங்க நிர்வாகிகள் ரவி,  குறிஞ்சிகுமரன் உள்ளிட்டோர் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல் சங்கர், நிர்வாகிகள் ஜெயபிரகாசம், சாய் சுப்பிரமணியத்தை சந்தித்தனர்.
அதன்பேரில் நேற்று மதுரையில் நடந்த வணிகர் சங்க கூட்டமைப்பின் கூட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு முன் ஜன.7ல் கருப்பு கொடி ஏற்றி ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்தனர்.

