நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மதுரை அரசு மருத்துவமனை, திருமங்கலம் அரசு மருத்துவமனை இணைந்து திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் சமூக நல்லிணக்க ரத்ததான முகாமை நடத்தின.
திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ராம்குமார் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நகரத் தலைவர் அஜ்மீர் அலி, மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் அப்துல் ரபிக், தி.மு.க., வட்டச் செயலாளர் ஜாகிர் உசேன் பங்கேற்றனர்.