/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாய்களுக்கு வைகை அணை நீர் திறப்பு
/
கண்மாய்களுக்கு வைகை அணை நீர் திறப்பு
ADDED : பிப் 10, 2025 04:55 AM

திருப்பரங்குன்றம்: பாசனத்திற்காக கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாயில் வைகை அணை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்கள், கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் பகுதியிலுள்ள கண்மாய்கள் வைகை தண்ணீரால் நிரம்பும். இந்தாண்டு வைகை அணை ஆற்றுப்பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் விளாச்சேரி, பானாங்குளம், சேமட்டான்குளம், செவ்வந்திகுளம், குறுக்கட்டான், தென்கால், பெருங்குடி, நிலையூர் பெரிய கண்மாய்கள் நிரம்பின.
பின்பு கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் பகுதியிலுள்ள பரம்புபட்டி, வலையப்பட்டி, வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, தொட்டியபட்டி, சோளங்குருணி கண்மாய்களுக்கு மழை நீர் திறக்கப்பட்டது.
மூன்று நாட்களுக்குமுன்பு கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய்க்கு வைகை அணை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் பகுதியில் சில கண்மாய்கள் நிரம்பியுள்ளன. ஏழு நாட்களுக்கு வைகை அணை தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் மற்ற கண்மாய்களும் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

