ADDED : மார் 04, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லூரியில் ராதா தியாகராஜன் நினைவு ரத்ததான முகாம் நடந்தது. முதல்வர் பாண்டியராஜா துவங்கி வைத்தார்.
அரசு மருத்துவனை, கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடந்த முகாமில், மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, ரத்ததானம் செய்தனர். பெறப்பட்ட ரத்தம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பயனாளிகள் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. பேராசிரியர்கள் முருகன், கோவிந்தராஜ், செல்வக்குமார், அன்பரசி ஏற்பாடு செய்தனர்.
