நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி ரத்ததான கழகம் சார்பில் உதிரம் - 2026 மாரத்தான் ஓட்டத்தை கல்லுாரி வளாகத்தில் இருந்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் துவக்கி வைத்தார்.
கல்லுாரி டீன் அருள் சுந்தரேஷ்குமார், பொதுமருத்துவத் துறைத்தலைவர் டாக்டர் செந்தில், துணை முதல்வர் மல்லிகா, மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், டாக்டர்கள் சிந்தா, அன்பரசன், ஆர்.எம்.ஓ., சரவணன் கலந்து கொண்டனர். கல்லுாரி வளாகத்தில் இருந்து கே.கே.நகர் வழியாக மீண்டும் கல்லுாரியை வந்தடைந்தது. ஆடவர் பிரிவில் சதீஷ் முதலிடம், நீரஜ் இரண்டாமிடம் பெற்றனர். பெண்கள் பிரிவில் யாஷிசாசன் முதலாமிடம், மீனு இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.72ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

