
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரையில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பத்மாலயா ரோட்டரி ரத்த வங்கியில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ரத்ததான முகாம் தலைவர் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் பாண்டியன் தலைமை தாங்கினார். நிகழ்வில் 150 பேர் ரத்த தானம் செய்தனர்.
நிகழ்ச்சியில் பத்மாலயா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் குரு சுந்தர்,மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர், செயலாளர்களின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தினேஷ் குமார், ரத்ததான முகாம் தலைவர் இன்ஜினியர் ஜெயசீலன், துணைத் தலைவர் டாக்டர் சுரேஷ் பாண்டியன், மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்த பாண்டியன், மாவட்ட செயலாளர் சாந்தாராம் முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம், ரோட்டரி பப்ளிக் இமேஜ் ஒருங்கிணைப்பாளர் நெல்லை பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.

