தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிவில் சர்வீஸ் மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி

 சிவில் சர்வீஸ் மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி

 சிவில் சர்வீஸ் மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி


ADDED : ஜூன் 17, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: அடுத்தாண்டு நடக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரியாக விரும்பும் மாணவர்களுக்காக டி.ஏ.வி., சிவில் சர்வீசஸ் அகாடமி சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இங்கு முதல்நிலை, முதன்மை தேர்வுகளுக்கு முழுமையாகத் தயாராகும் வகையில் 10 மாத கால தங்கிப் படிக்கும் சிறப்புப் பயிற்சித் திட்டம் உள்ளது. மாணவர்களின் வசதிக்காக சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள 'எஸ்.எம்.கே. போம்ரா கல்வி நிறுவனங்கள்', புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள 'வேதிக் வித்யா கேந்திரா' ஆகிய இரு வளாகங்களில் செயல்படவுள்ளது.

அனுபவம் வாய்ந்த, தற்போதைய சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்த அகாடமியின் முதல் மூன்று பேட்ச்களில் படித்த மாணவர்களில் 20க்கும் மேற்பட்டோர் அகில இந்திய அளவில் ரேங்க் பெற்றுள்ளனர். தகுதியான மாணவர்கள் 100 சதவீதம் வரை கல்வி உதவித்தொகையில் படிக்கலாம்.

இதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 28 நடக்கிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசி நாளாகும். விரிவான தகவல்களை https://civilservices.davchennai.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம். தகவல்களுக்கு 72006 64649ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us