பேரையூர்: பேரையூர் பேரூராட்சி சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகையில்லா பொங்கல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரூராட்சி தலைவர் காமாட்சி பேசியதாவது: புகையில்லா போகி பண்டிகை, பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும். மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்றார். செயல் அலுவலர் சிவக்குமார், தலைமை ஆசிரியை விமலாதேவி, ஆசிரியர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி உசிலம்பட்டி நகராட்சி சுகாதார பணியாளர்கள், அலுவலர்கள் இணைந்து புகையில்லா போகி, மாசில்லா தமிழகம் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முருகேசன், நகராட்சி துணைத்தலைவர் தேன்மொழி, கமிஷனர் இளவரசன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரூராட்சி சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் தீபா வரவேற்றார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெஸ்ஸி, மேற்பார்வையாளர் ராமு கலந்து கொண்டனர்.

