ADDED : மார் 25, 2026 06:07 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகத்திற்கு காலை 11:30 மணிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதில், 'மாவட்டம் முழுதும் உள்ள போஸ்ட் ஆபீஸ்கள், ரேஸ்கோர்ஸ், கோச்சடையில் உள்ள பாஸ்போர்ட் ஆபீஸ்களில் 'சயனைடு' கலந்த ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டுகள் மதியம் 12:30 மணிக்கு வெடிக்கும். அனைவரையும் வெளியேற்றவும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் மாவட்டம் முழுதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின், அது புரளி என தெரிந்தது. வெடிகுண்டு சோதனை தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
