ADDED : ஜன 05, 2025 05:30 AM
திருநகர் : திருநகர் மக்கள் மன்றம் சார்பில் நடந்த 39வது தேசிய புத்தக கண்காட்சி நிறைவு விழா, நுால் வெளியீட்டு விழா, பள்ளிகளுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கும் விழா, அதிக புத்தகங்களை வாங்கியவர்களுக்கு 'வாசக செம்மல் விருது' வழங்கும் விழா நடந்தது. தலைவர் செல்லா தலைமை வகித்தார். இணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாவட்ட கழிவு பஞ்சு வியாபாரிகள் நலச் சங்க செயலாளர் சர்வேஸ்வரன், திருநகர் லயன் சங்க முன்னாள் வட்டார தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் சந்திரன் வாசிப்பு 'வாழ்க்கையை வசமாக்கும்' என்ற தலைப்பில் பேசினார். வரலாற்று ஆய்வாளர் சத்தார் எழுதிய இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மதுரை மவுலானா சாகிப் என்ற நுால் வெளியிடப்பட்டது. அம்மன் ஓட்டல் உரிமையாளர் லட்சுமணன் விருது வழங்கினார். மன்ற நிர்வாக குழு உறுப்பினர் பிச்சுமணி, நடைபயிற்சி நண்பர்கள் குழு பவுன், அனைத்து வியாபாரிகள் நலச் சங்க செயலாளர் முகமது இசாக், ஜெயிண்ட்ஸ் குரூப் வட்டார தலைவர் குருசாமி, கவுன்சிலர் இந்திராகாந்தி, மன்ற துணைத் தலைவர் பொன் மனோகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கிருஷ்ணமூர்த்தி, மண்டல மேலாளர் மகேந்திரன் கலந்து கொண்டனர்.

