/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முடிவுக்கு வந்தது போர்வெல் போராட்டம்
/
முடிவுக்கு வந்தது போர்வெல் போராட்டம்
ADDED : ஜன 22, 2026 05:38 AM
மதுரை: போர்வெல் தொழிலுக்கு தேவையான டிரில்லிங் பிட்கள் கார்பன் ஸ்டீலால் ஆனவை. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் இந்த பிட்டுகளின் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்துள்ளது. இதனால் அவை கிடைப்பது சிரமமாக இருந்தது. அதன் விலை 150 சதவீதம் உயர்ந்ததால் தொழில் கடுமையாக பாதித்தது.
இதையடுத்து போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரண்டுநாட்கள் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து நேற்று போர்வெல் உரிமையாளர்கள், ஏஜன்டுகள் நலச் சங்கத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதன் தலைவர் சுரேஷ் கூறியதாவது: கார்பன் ஏற்றுமதி தடையால் டிரில்லிங் பிட்டுகள் அதிகவிலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேறுவழியின்றி சேவைக்கான கட்டணத்தை 15 சதவீதம் அதிகரித்துள்ளோம்.
இதனால் இன்று (ஜன.22) போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. மூன்று மாதத்திற்குள் அவற்றை சிரமமின்றி கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும். இல்லையெனில் தொழிலை நிறுத்தும் நிலைக்கு தள்ள படுவோம்'' என்றார்.

