ADDED : மார் 12, 2024 06:33 AM
அ நிறம் | அளவு
அலங்காநல்லுார் : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து குலமங்கலத்திற்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் சென்றது.
அலங்காநல்லுார் அருகே பூதக்குடி விலக்கு அருகே மது போதையில் இருந்த குலமங்கலம் ஆட்டோ டிரைவர் பால்பாண்டி 23, அரசு பஸ் மீது கல், பீர் பாட்டிலை எறிந்தார். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. டிரைவர் கதிரேசன் புகாரில் பால்பாண்டியை அலங்காநல்லுார் போலீசார் தேடி வருகின்றனர்.
