ADDED : ஏப் 27, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை   மதுரை ரோட்டரி கிளப் மெட்ரோபோலிஸ், தேவி கார்ப் சயின்ஸ் சார்பில் மதுரை ரியோ மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தாய்ப்பால் வங்கி துவக்கவிழா நடந்தது.
கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்து பேசுகையில் ''இவ்வங்கியானது மதுரை, சுற்றுவட்டார பகுதி பச்சிளம் குழந்தைகள், பெண்களுக்கு  வரப்பிரசாதமாக இருக்கும். தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் கிடைப்பதால் பச்சிளம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணிகளை தவிர்க்கலாம்'' என்றார்.
மருத்துவமனை தலைவர் டாக்டர் சரவணன், கவிதா சரவணன், தேவி பயிர் அறிவியல் தலைவர் தீனசந்திரன், டி.ஆர்.எப்.சி., மாவட்ட தலைவர் கண்ணன் உடன் இருந்தனர். ரோட்டரி உறுப்பினர்கள் பாண்டிதுரை, வாசன், அருளரசு, கலையரசன் ஏற்பாடுகளை செய்தனர்.

