ADDED : மார் 03, 2026 05:49 AM

வாடிப்பட்டி: திருப்பரங்குன்றம் ஒன்றியம் துவரிமான் ஊராட்சி மேலத் தெருவில் பராமரிக்கப்படாத சுகாதார வளாகத்தை அப்பகுதியினர் அச்சத்துடனே பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2021--22ல் தொகுதி எம்.பி., நிதி ரூ.8 லட்சத்தில் குளியல் தொட்டியுடன் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
சில மாதங்களில் வளாகத்தில் டைல்ஸ் கற்கள் உடைய துவங்கின. பின் பராமரிக்கப்படாததால் உடைப்புகள் அதிகரித்து பள்ளமானது.
கழிப்பறை கதவுகளும் உடைந்தன. கற்கள் உடைந்து பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கிறது. இதனால் வளாகத்தை பயன்படுத்த பெண்கள் தயங்குகின்றனர்.
அப்பகுதி லதா: இந்த சுகாதார வளாகத்தை குளிக்க, துணி துவைக்க இப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வருகிறோம். வளாகத்தில் கழிவு நீர் தேங்கி பராமரிப்பின்றி உள்ளதால் பாசி பிடித்து வழுக்கிறது. உடைந்த டைல்ஸ் கற்கள் மற்றும் கழிப்பறை கதவுகளை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என்றார்.
