ADDED : மார் 13, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை, குருவித்துறை, பாலகிருஷ்ணாபுரத்தில் ரேஷன் கடை, சின்ன இரும்பாடியில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக இருந்தது. தெரு நாய்களின் வசிப்பிடமாகவும் வழிப்போக்கர்கள் இளைப்பாறவும் பயன்பட்டது.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. இதையடுத்து உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் கட்டடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
