ADDED : ஆக 24, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
மேலுார்: தி.பழையூர் வாகுடி அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது.
பெரிய மாடு பந்தயத்தில் ஒன்பது ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் திருவாதவூர் அமர்தீப், கல்லணை விஸ்வா ரவிச்சந்திரன், கொட்டக்குடி மகாராஜா, கொடிமங்கலம் திருப்பதி மாடுகள் முதல் 4 பரிசை வென்றன.
சிறிய மாடு பந்தயத்தில் 24 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. ஆனைமலையான் பட்டி நட்சத்திரா மனோஜ், தேனி சின்னச்சாமி முதல் பரிசு, பரவை சோனைமுத்து, டி.உலகு பிச்சன்பட்டி ரமேஷ் ராஜா இரண்டாம் பரிசு, பாகனேரி கார்த்திகேயன், சின்ன மாங்குளம் அழகு மூன்றாம் பரிசு, கல்லணை ரவிச்சந்திரன், கம்பூர் குமார் மாடுகள் நான்காம் பரிசை வென்றன.
