/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாட்டு வண்டி பந்தயம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மாட்டு வண்டி பந்தயம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 19, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மேலுார் அருகே கொட்டாணிபட்டி அரவிந்த் கண்ணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கொட்டாணிபட்டியில் கோயில் திருவிழாவையொட்டி ஏப்.27ல் மாட்டு வண்டி பந்தயம் நடத்த முடிவு செய்துள்ளோம். அனுமதி கோரி கீழவளவு போலீசில் மனு அளித்தோம். நடவடிக்கை இல்லை. அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.தனபால் விசாரித்தார். அரசு தரப்பு, 'மனு பரிசீலனையில் உள்ளது. விசாரித்து சட்டப்படி போலீசார் முடிவெடுப்பர்' என தெரிவித்தது.
நீதிபதி: மனுவை சாதகமாக போலீசார் பரிசீலித்து நிபந்தனைகள் விதித்து, ஒரு வாரத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.