ADDED : பிப் 08, 2026 06:46 AM

அ நிறம் | அளவு
மேலுார்: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளலுார் நாடு அ.தி.மு.க., சார்பில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தை எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் துவக்கி வைத்தார்.
பெரிய மாடு பந்தயத்தில் 9 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் கோட்டநத்தாம்பட்டி ரவி, புலி மலைப்பட்டி முனிசாமி, தேனி மனோஜ்குமார், அவனியாபுரம் மோகன்சாமிகுமார் மாடுகள் முதல் 4 பரிசுகளை வென்றன. சிறிய மாடு பந்தயத்தில் 26 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
முதல் பரிசை சாத்தமங்கலம் பசும்பொன், மட்டங்கிபட்டி ஜெகநாதன், 2ம் பரிசை புளியங்குடி முனிச்சாமி, புலி மலைப்பட்டி முனிசாமி, 3ம் பரிசை கோட்டபத்தாம்பட்டி சுப்பையா, உடன்பட்டி கணேஷ் மாடுகள் வென்றன.
