ADDED : மார் 15, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
மேலுார்: உறங்கான்பட்டியில் ராக்காயி அம்மன் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு கிராமத்தினர் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
பெரிய மாடு பந்தயத்தில் 15 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் மதுரை மோகன் சாமி குமார், மதுரை பாண்டிசாமி, மட்டங்கிபட்டி ஜெகநாதன் மாடுகள் முதல் 3 பரிசுகளை வென்றது.
சிறிய மாடு பந்தயத்தில் 47 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. வீரபுரம் கிருஷ்ணமூர்த்தி அழகிச்சி பட்டி விஜயபாரதி முதல் பரிசையும், மதுரை ராமையா, சுண்ணாம்பிருப்பு கண்ணன் 2ம் பரிசையும், நல்லான்குடி முத்தையா, கோட்டநத்தாம்பட்டி ரவி மாடுகள் 3ம் பரிசையும் வென்றன.
