UPDATED : நவ 26, 2026 04:56 PM
ADDED : நவ 26, 2026 04:54 PM

மேலுார்:
புலிமலைபட்டியில் கிராம மக்கள் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
பெரிய மாடு பந்தயத்தில் 8 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் புதுப்பட்டி வேலு கிருஷ்ணன், புலிமலைபட்டி கிருஷ்ணன், முனிச்சாமி மாடுகள் முதல் 3 பரிசுகளை வென்றன. நடுமாடு பந்தயத்தில் 15 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் உறங்கான்பட்டி மோகன கிருஷ்ணன், பாகனேரி ஆனந்த பார்த்திபன், புலிமலைப்பட்டி நீதிதேவன் மாடுகள் முதல் 3 பரிசுகளை வென்றன.
கரிச்சான் (மீடியமான) மாடு பந்தயத்தில் 40 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் கே.கே. பட்டி பிரசன்னா, புலிமலைப்பட்டி கணேஷ் முதல் பரிசு, திருவாதவூர் பதினெட்டான், கூடலுார் மோகனா 2ம் பரிசு, விராமதி தையல் நாயகி, புலிமலைப்பட்டி வைரகிழவன் மாடுகள் 3ம் பரிசை வென்றன.
