ADDED : மார் 06, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் அருகே முத்துநாகையாபுரம் சின்னச்சாமி மகள் பிரியா 26. இவர் மார்ச் 1ம் தேதி மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது சமையல் செய்வதற்காக காஸ் அடுப்பை ஆன் செய்தார். அதற்குள் அவசர வேலையாக வெளியே சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்து காஸ் அடுப்பில் தீ வைத்த போது அது குபீர் என்று தீப்பிடித்தது. இதில் பிரியா தீக் காயம் அடைந்து விருதுநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இறந்தார்.
பேரையூர் எஸ்.ஐ., சின்னச்சாமி விசாரிக் கிறார்.
