நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : சின்னப்பூலாம்பட்டி மாரியப்பன் 52. தனியார் பஸ் டிரைவர். இவர் பேரையூரில் இருந்து அத்திபட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் சின்னபூலாம்பட்டி செல்வதற்காக ஏறினார்.
இவருக்கும், கண்டக்டர் முத்துகணேசனுக்கும் 56, வாய்த் தகராறு ஏற்பட மாரியப்பன் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டார். பஸ் அத்திபட்டி சென்று விட்டு சின்னப்பூலாம்பட்டி வந்தபோது பஸ்சை வழிமறித்து மாரியப்பன், உறவினர்கள் அர்ஜூனன், அருண் ஆகியோர் கண்டக்டரை தாக்கினர். மாரியப்பன் கைது செய்யப்பட்டார்.

