sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி உசிலம்பட்டியில் கடைகள் அகற்றம்

/

 பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி உசிலம்பட்டியில் கடைகள் அகற்றம்

 பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி உசிலம்பட்டியில் கடைகள் அகற்றம்

 பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி உசிலம்பட்டியில் கடைகள் அகற்றம்


UPDATED : ஜன 09, 2026 07:41 AM

ADDED : ஜன 09, 2026 06:22 AM

Google News

UPDATED : ஜன 09, 2026 07:41 AM ADDED : ஜன 09, 2026 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்டை விரிவாக்கம் செய்து புதுப்பிப்பதற்காக 2023ல், அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

கடந்த 2023 ஜூலை 8 முதல், தற்காலிக பஸ்ஸ்டாண்ட் தேனி ரோட்டில் உள்ள அரசினர் குடியிருப்பு வளாகத்திற்கு மாற்றப்பட்டது. 2023 ஜூலை 17 முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் அடைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

விரிவாக்கப் பணிக்காக 7 ஏக்கர் 85 சென்ட் பரப்புள்ள சந்தை திடலுக்குள் ஒரு ஏக்கர் நிலம் தேவைப்பட்டது.உசிலம்பட்டி பேரூராட்சியாக இருந்து டிச.1995ல், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியாக மாறிய நிலையில், ஒன்றியம் வசம் இருந்த சந்தை திடல் பகுதி நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை.

அதை நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். மார்ச் 2024 ல், நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டபின்பே சந்தை திடல் நகராட்சி வசமானது.

தற்போது பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்காக தேவைப்படும் ஒரு ஏக்கர் பகுதியை அளவிட்டு நவதானிய கடைகள், தேனி ரோடு, நபார்டு கடைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சந்தை திடலில் தற்காலிக மாற்று இடம் கொடுத்துள்ளனர். நேற்று ஒரு ஏக்கர் அளவிட்ட பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. நகராட்சி கமிஷனர் இளவரசன், பொறியாளர் சசிக்குமார், நகராட்சி பணியாளர்கள் முன்னிலையில் கடைகளை அகற்றும் பணி நடந்தது.






      Dinamalar
      Follow us