/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி பத்தாண்டு குப்பை அகற்றம்
/
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி பத்தாண்டு குப்பை அகற்றம்
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி பத்தாண்டு குப்பை அகற்றம்
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி பத்தாண்டு குப்பை அகற்றம்
ADDED : ஆக 26, 2025 03:55 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி சந்தை திடல் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து 10 ஆண்டு களுக்கும் மேலாக குவிந்திருந்த குப்பையை அகற்றும் பணி நடந்து வருகிறது.
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய வசம் இருந்த 7 ஏக்கர் 85 சென்ட் சந்தை திடல் சமீபத்தில் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. சந்தை இடத்திலிருந்து ஒரு ஏக்கர் பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்கு தேவைப்படுவதால் நவதானிய கடைகள் வைத்துள்ளவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை வழங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மாற்று இடம் வழங்கு வதற்காக 10 ஆண்டு களுக்கும் மேலாக ஊராட்சி ஒன்றிய நிர் வாகம் சுத்தப்படுத்தாமல் குவிந்திருந்த குப்பையை அகற்றி தரையை சமப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
அவர்கள் மாற்று இடத்திற்குச் சென்ற பின் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணிகள் நடக்கும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.