/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலம் தற்காலிக பஸ்ஸ்டாண்டில் சேற்றில் சிக்்கிக் கொண்ட பஸ்
/
திருமங்கலம் தற்காலிக பஸ்ஸ்டாண்டில் சேற்றில் சிக்்கிக் கொண்ட பஸ்
திருமங்கலம் தற்காலிக பஸ்ஸ்டாண்டில் சேற்றில் சிக்்கிக் கொண்ட பஸ்
திருமங்கலம் தற்காலிக பஸ்ஸ்டாண்டில் சேற்றில் சிக்்கிக் கொண்ட பஸ்
ADDED : மே 17, 2025 01:38 AM

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் தற்போது பராமரிப்பு காரணங்களுக்காக மூடப்பட்டு தற்காலிகமாக தெற்கு தெருவில் உள்ள தனியார் காலி இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கழிப்பறை, குடிநீர்உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாத நிலையில் பொதுமக்களுக்கு தேவையான நிழற்குடைகளும் அமைக்கப்படவில்லை. இதனால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த இடத்தில் பஸ்களை நிறுத்துவதற்கு போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் கடும் துாசி பரவி வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமங்கலத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. நேற்று பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பஸ்கள் முதல் பயணிகள் வரை அனைவரும் அவதிக்கு உள்ளாகினர்.
திருமங்கலத்தில் இருந்து எஸ்.வெள்ளாகுளம் செல்லும் பஸ் பஸ் ஸ்டாண்டில் சேற்றில் மாட்டிக் கொண்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் ஊழியர்கள் மீட்டனர். எனவே இங்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு பஸ்கள் வந்து செல்வதற்கு உரிய ஏற்பாடுகளையும் நகராட்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.