நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் டெப்போ அரசு பஸ் டிரைவர் பாண்டி 47, நேற்று திருமங்கலத்தில் இருந்து டி.கொக்குளத்திற்கு சென்று விட்டு பயணிகளோடு மீண்டும் திருமங்கலத்திற்கு பஸ்சை ஓட்டிவந்தார். துாம்பக் குளம் அருகே வந்தபோது அதே ஊரைச் சேர்ந்த கருப்பு 30, பஸ்சை மறித்து டிரைவருடன் தகராறு செய்தார். அங்கிருந்தவர்கள் கருப்பை திட்டி அனுப்பி வைத்தனர்.
ஆனால் பஸ் கிளம்பியவுடன் பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்லை கருப்பு வீசினார். இதில் கண்ணாடி உடைந்தது. டிரைவர் பாண்டி புகாரில் கூடக் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

