sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சி.புதுாரில் ரோட்டை அகலப்படுத்துங்க

/

 சி.புதுாரில் ரோட்டை அகலப்படுத்துங்க

 சி.புதுாரில் ரோட்டை அகலப்படுத்துங்க

 சி.புதுாரில் ரோட்டை அகலப்படுத்துங்க


ADDED : மார் 10, 2026 06:08 AM

Google News

ADDED : மார் 10, 2026 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே சி.புதுாரில் குறுகலான ரோட்டை வாகனங்கள் செல்ல வசதியாக அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர் பிரகாஷ் கூறியதாவது: இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அய்யங்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சி.புதுார் பிரிவில் இருந்து ஊருக்குள் செல்லும் ரோடு குறுகலாக உள்ளது. தினமும் ஏராளமான பள்ளிவாகனங்கள், டூவீலர்கள் இதில் செல்கின்றன.

வேன், பஸ் வரும்போது மற்ற வாகனங்கள் ஒதுங்கக்கூட இடமில்லை. ஒருவழிப்பாதை போன்று உள்ளது. இரவில் போதிய விளக்குகள் இன்றி விலக இயலாமல் டூவீலர்கள்கூட பள்ளத்திற்குள் கவிழும் நிலை உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்றார்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''அதிக போக்குவரத்து இருந்தால்தான் ரோட்டை அகலப்படுத்த முடியும். எனவே இது குறித்த சோதனை நடத்தி முடிவெடுப்போம்'' என்றனர்.






      Dinamalar
      Follow us