UPDATED : நவ 13, 2026 07:01 PM
ADDED : நவ 13, 2026 06:58 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு தெரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மாணவர்களுக்கு கேக், பொங்கல் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.
மதுரை மாவட்டத்தில் 1544 அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் 2 லட்சத்து 66 ஆயிரத்து 405 மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீரராகவராவ், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, சி.இ.ஓ., தயாளன், ஆர்.டி.ஓ., சங்கீதா, தாசில்தார் வசந்த், டி.இ.ஒ., கணேசன், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் பங்கேற்றனர்.
