ADDED : செப் 20, 2024 05:40 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதில் தனியார் நிறுவனங்களிடையே ஆர்வம் குறைவாக உள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு, பயிற்சி வழங்குவதற்காகவே ஆலோசனை மையம் ஒன்று தற்போது கலெக்டர் அலுவலகத்தில் துவக்கப்பட்டுள்ளது. டி.வி.எஸ்., நிறுவனம், ரீஆக்ட் தொண்டு நிறுவனம் சார்பில் துவங்கப்பட்ட இம்மையத்தில் 2 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்பு எண்: 87789 45248.
இதேபோல மாவட்ட அளவில் 400க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களை வரவழைத்து 'மெகா முகாம்' நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இ- மெயில், வாட்ஸ் அப் என பலவழிகளிலும் தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால் நிறுவனங்களிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதுவரை 10 நிறுவனங்களே முகாமில் பங்கேற்பதாக பதில் தெரிவித்துள்ளன.