/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலெக்டர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம்
/
கலெக்டர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம்
ADDED : பிப் 10, 2024 05:15 AM

மதுரை: மதுரையில் நேற்று கல்குவாரி ஏலத்தில் பங்கேற்க ஏராளமானோர் திரண்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
மதுரை மாவட்டத்தில் சாதாரண கற்களை வெட்டி எடுப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கலாம் என கலெக்டர் அறிவித்தார். இதில் வாடிபட்டி தாலுகாவில் 5, மேலுாரில் 13, பேரையூரில் 3 என குவாரிகள் ஏலமிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடைசி நாளான நேற்று முன்தினம் மூடிய டெண்டர் விண்ணப்பம் வழங்குவது முடிந்தது.
நேற்று திறந்த நிலையில் ஏலமிடப்பட்டது. குறைதீர் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் கனிமவள துணை இயக்குனர் குருசாமி உட்பட அதிகாரிகள் ஏலமிட்டனர். இதில் பங்கேற்க பலர் திரண்டதால் கலெக்டர் அலுவலக வளாகமே பரபரப்பாக இருந்தது. ஆளுங்கட்சியினர் 'சிண்டிகேட்' அமைத்து ஏலத்தில்பங்கேற்றதாக சிலர் தெரிவித்தனர்.
திறந்தநிலை ஏலத்தில் கேட்கும் தொகை, மூடிய டெண்டரை பிரிக்கும்போது உள்ள தொகை, இவற்றில் எது அதிகமோ அத்தொகைக்கு ஏலம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரவு 8:00 மணி வரை வாடிப்பட்டி, மேலுார் தாலுகாவிலுள்ள குவாரிகளுக்கு ஏலம் விடப்பட்டது.
மேலுார் தாலுகாவில்பட்டூர் குவாரி மட்டும் வழக்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் இரவு 10:00 மணியை தாண்டியும் ஏலம் தொடர்ந்தது.