/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பென்னிகுயிக்கிற்கு நன்றிக் கடனாக கேம்பரலீ-மதுரை கலாசார இணைப்பு
/
பென்னிகுயிக்கிற்கு நன்றிக் கடனாக கேம்பரலீ-மதுரை கலாசார இணைப்பு
பென்னிகுயிக்கிற்கு நன்றிக் கடனாக கேம்பரலீ-மதுரை கலாசார இணைப்பு
பென்னிகுயிக்கிற்கு நன்றிக் கடனாக கேம்பரலீ-மதுரை கலாசார இணைப்பு
ADDED : ஜன 15, 2026 08:43 AM

மேலுார்: முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு நன்றிக் கடனாக, அவர் பிறந்த இங்கிலாந்து கேம்பரலீ நகரத்தையும், மதுரையையும் கலாச்சார ரீதியாக இணைக்கும் நிகழ்ச்சிக்காக, அந்நகர மேயர் தலைமையில் வந்த குழுவினருக்கு மேலுாரில் விவசாய சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி,பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். மேலுார் பென்னிகுயிக் பஸ் ஸ்டாண்ட் முன்பு விவசாய சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, மேயர் லுாயிஸ் ஆஸ்பெரி, துணை மேயர் கிளிப் பென்னட், கவுன்சிலர் ஆலன் ஆஸ்பெரி, குழுவைச் சேர்ந்த சாரோன் ஆன் பில்லிங், நிக்கோலா கோல்ஸ், மாத்யூ ஸ்லீப் உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செய்தனர்.
பென்னிகுயிக்கின் 185 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டியும், இனிப்பு கொடுத்தும் கொண்டாடினர். செந்தில் போஜராஜன் தலைமையில் சிலம்பாட்டம் நடந்தது. பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சேவுகமூர்த்தி, மணவாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேயர் லுாயிஸ் ஆஸ்பெரி அளித்த பேட்டியில் கூறியதாவது: என்னுடைய இந்த பயணம் வெறும் அலுவல் சார்ந்த பயணம் அல்ல; நன்றியை தெரிவிக்கும் பயணம். இந்திய கலாசாரம் குறித்து புத்தகங்களில் படித்திருக்கிறேன்; தற்போது தான் அனுபவபூர்வமாக உணர்கிறேன். கேம்பரலீ, மதுரை நகரங்களுக்கிடையே வரலாற்று ரீதியான தொடர்பை புதுப்பிப்பதுடன், கலாசார பரிமாற்றம், தொழில் முதலீடுகள், கல்வியை மேம்படுத்த உள்ளோம். இந்த பயணத்திற்கு முக்கிய காரணமானவர் அணையை கட்டிய கர்னல் பென்னி குயிக் என்றார்.

