/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கச்சிராயிருப்பில் கால்வாயை காணவில்லை
/
கச்சிராயிருப்பில் கால்வாயை காணவில்லை
ADDED : ஜன 05, 2026 05:45 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் பாசன கால்வாயை காணவில்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
அப்பகுதி நந்தீஸ்வரன் கூறியதாவது: தென்கரை கண்மாயின் முதல் மடையில் இருந்து வெளியேறும் பாசன கால்வாய் நாராயணபுரம், மேலமட்டையான், கச்சிராயிருப்பு வழியே மேலக்கால் கண்மாய்க்கு செல்கிறது.
இதனால் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பத்து ஆண்டுகளாக பராமரிப்பின்றி துார்வாராததால் கால்வாய் இருந்த தடயமே இல்லாமல் போய்விட்டது.
பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் மூடப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே இப்பகுதிகளில் பல ஏக்கர் நிலங்கள் தரிசாகிவிட்டன. ஆக்கிரமிப்பை சரிசெய்ய பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றார்.

