ADDED : மார் 25, 2026 11:31 PM

அ.தி.மு.க, வேட்பாளர் பயோடேட்டா
////
மதுரை மேற்கு பெயர்: செல்லுார் ராஜூ
வயது : 72
படிப்பு: பி.எஸ்.சி.,
தொழில்: அரசியல்வாதி
குடும்பம்: மனைவி, இரு மகள்கள்
அரசியல் அனுபவம்: 40 ஆண்டுகள் அரசியல் அனுபவம். இருமுறை அமைச்சர். கட்சியின் அமைப்பு செயலாளராகவும், மதுரை நகர் செயலாளராகவும் உள்ளார்.
கிடைத்தது எப்படி: நீண்டகால அரசியல் அனுபவம். இத்தொகுதியில் ஏற்கனவே 3 முறை வெற்றி பெற்றதன் அடிப்படையில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
///
திருமங்கலம் பெயர் : ஆர்.பி.உதயகுமார்
வயது : 52
படிப்பு : பி.காம்., எம்.எஸ் டபிள்யு., பி.எல்.,
தொழில் :அரசியல்வாதி
குடும்பம் : மனைவி, இரு மகள்கள்
அரசியல் அனுபவம்: கட்சியின் ஜெ., பேரவை மாநில செயலாளராவும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர். 2022 முதல் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர்.
கிடைத்தது எப்படி: தொடர்ந்து 10 ஆண்டுகள் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தி.மு.க.,வுக்கு எதிராக தினமும் அறிக்கை, பேட்டி கொடுப்பது, வீடியோ வெளியிடுவது. பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவராக இருப்பது.
//
திருப்பரங்குன்றம் பெயர்: ராஜன் செல்லப்பா
வயது: 75
படிப்பு: பி.ஏ., பி.எல்.,
தொழில்: அரசியல்வாதி
குடும்பம்: மனைவி, ஒரு மகன்
அரசியல் அனுபவம்: எம்.பி., மதுரை மேயர், 2016ல் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., 2021ல் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போது மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.
கிடைத்தது எப்படி: கட்சியில் 'சீனியர்'. 'சிட்டிங்' எம்.எல்.ஏ., திருப்பரங்குன்றம் மலை, தீபத்துாண் விவகாரத்தை உள்ளூர் எம்.எல்.ஏ., என்ற முறையில் எவ்வித சர்ச்சைக்கும் இடமின்றி லாவகமாக நடந்து கொண்டது. இவரது மகன் ராஜ்சத்யன் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாநில செயலாளர் என்ற முறையில் பழனிசாமிக்கு நெருக்கமாக இருப்பது.
///
நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல் //
மதுரை மேற்கு பெயர்: விக்னேஷ்குமார்
வயது: 29
படிப்பு: பி.ஏ., எல்.எல்.பி.,
தொழில்: வழக்கறிஞர்
குடும்பம்: மனைவி -ஆசிரியையாக உள்ளார்.
அரசியல் அனுபவம்: வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், மாணவர் பாசறை, இளைஞர் பாசறையில் பதவி என 16 ஆண்டுகள் அரசியல் பயணம்
கிடைத்தது எப்படி: சீமான் முடிவு
///
திருமங்கலம் பெயர் : முனீஸ்
வயது : 36
படிப்பு : எம்.பி.பி.எஸ்., எம்.டி.,
தொழில் : மருத்துவம்
குடும்பம் : மனைவி, மகள்
அரசியல் அனுபவம் : 10 ஆண்டுகள் கட்சிப் பணி
கிடைத்தது எப்படி: கட்சியில் களப்பணி, படித்தவர், மருத்துவர் என்ற காரணம்.
//
திருப்பரங்குன்றம் பெயர்: சத்தியா தேவி
வயது: 38
படிப்பு: எம்.காம்., எம்.பில்., பி.எச்.டி.,
தொழில்: உதவி பேராசிரியர்
குடும்பம்: கணவர், மகன், மகள்,
அரசியல் அனுபவம்: இரண்டு ஆண்டுகளாக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
கிடைத்தது எப்படி: 2024ல் மதுரை லோக்சபா வேட்பாளராக போட்டியிட்ட அனுபவம்
