தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வேட்பாளர்கள் பயோடேட்டா

 வேட்பாளர்கள் பயோடேட்டா

 வேட்பாளர்கள் பயோடேட்டா


ADDED : ஏப் 04, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 06:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை தெற்கு தொகுதி

இராம ஸ்ரீநிவாசன்

வயது: 61

படிப்பு : பிஎச்.டி.,

தொழில் : அரசியல், கவுரவ பேராசிரியர்

குடும்பம் : மனைவி திலகாஸ்ரீ, மகள்.

அரசியல் அனுபவம்: 1985 முதல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். 1995 முதல் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில இணை அமைப்பாளராக செயல்பட்டார். 2016 முதல் 2020 வரை பா.ஜ. மாநில செயலாளர், 2020 முதல் தற்போது வரை மாநில பொதுச் செயலாளர்.

கிடைத்தது எப்படி: 2016ல் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ. வேட்பாளராக போட்டியிட்டார். 2024 ல் மதுரை லோக்சபா தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக போட்டியிட்டு 2 லட்சத்து 21 ஆயிரம் ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். பா.ஜ., வின் சித்தாந்த முகமாக பார்க்கப்படும் இவர், பல்வேறு ஜாதி அமைப்புகளுடன் எளிதாக பழகக்கூடியவர். முரசொலி அறக்கட்டளையின் பஞ்சமி நில விவகாரத்தில் டில்லி சென்று மனு செய்து நீதிமன்றத்தில் வழக்காக மாற்றியது இவரே. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கு உறுதுணையாக இருந்ததால் வேட்பாளர் வாய்ப்பு கிடைத்தது.

-----------------------------

உசிலம்பட்டி தொகுதி

டி.சரவணகுமார்

வயது: 47

படிப்பு : எம்.பி.ஏ., எல்.எல்.பி.,

தொழில்: அரசியல்வாதி, ஒப்பந்ததாரர்,

குடும்பம்: மனைவி, 2 மகள்கள்

அரசியல் அனுபவம்: முதலில் மாணவர் காங்., 2010----13ல் இளைஞர் காங்., 2016ல் உசிலம்பட்டி சட்டசபை தேர்தல்குழு உறுப்பினர், 2019 ல் தேனி லோக்சபா தேர்தல் பொறுப்பாளர், தற்போது உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர்

கிடைத்தது எப்படி: மூன்று தலைமுறைகளாக காங்., பாரம்பரிய குடும்பம். இவரது மாமனார் கம்பத்தின் முக்கிய காங்., தலைவராக இருந்த ஓ.ஆர்.ராமச்சந்திரன். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பதால் 'சீட்' கிடைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us