ADDED : பிப் 11, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கொடிக்குளம் முத்துலட்சுமி 40. ஒத்தக்கடை பகுதியில் ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்துவிட்டு ரோட்டோரம் நின்றிருந்த சரக்கு வேனில் பொருட்கள் வாங்க நின்றிருந்தார்.
அப்போது அசுர வேகத்தில் வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து முத்துலட்சுமி மீது வேனுடன் சேர்த்து மோதியது. இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காரை ஓட்டிய ஒத்தக்கடை திலீப்குமாரை 32, அப்பகுதியினர் 'கவனித்தனர்' ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

