ADDED : ஜன 13, 2025 03:57 AM
திருமங்கலம் : சேலத்தைச் சேர்ந்த சிலர் பெண் பார்ப்பதற்காக திருநெல்வேலிக்கு காரில் சென்றனர். காரை சேலத்தைச் சேர்ந்த ஆக்டிங் டிரைவர் சந்திரன் 60, ஓட்டினார். கள்ளிக்குடி தாலுகா அலுவலகம் அருகே இயற்கை உபாதைக்காக காரை ரோட்டோரம் நிறுத்தினர்.
டிரைவர் சந்திரன் காரின் பின்பகுதியில் நின்றிருந்தார். மற்ற மூன்று பேரும் காரின் முன்பகுதியில் சற்று தள்ளி நின்று இருந்தனர்.
சென்னையைச் சேர்ந்த அவிநாஷ் 42, சிங்கப்பூரில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். விடுமுறைக்காக வந்திருந்த அவர் திருநெல்வேலியில் உள்ள தனது தாயைப் பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு 4 வயது மகனுடன் சென்னையில் இருந்து காரில் திருநெல்வேலிக்கு கிளம்பினார்.
நேற்று காலை கள்ளிக்குடி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் நின்றிருந்த டிரைவர் சந்திரன் மீது மோதி, அருகே நின்றிருந்த காரின் மீதும் மோதியது. இதில் சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.