/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டில் இந்தாண்டும் கார், டூவீலர், பசு பரிசு
/
ஜல்லிக்கட்டில் இந்தாண்டும் கார், டூவீலர், பசு பரிசு
ஜல்லிக்கட்டில் இந்தாண்டும் கார், டூவீலர், பசு பரிசு
ஜல்லிக்கட்டில் இந்தாண்டும் கார், டூவீலர், பசு பரிசு
ADDED : ஜன 03, 2024 06:36 AM

பாலமேடு: பாலமேட்டில் ஜன.,16ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. போட்டி நடக்கும் மஞ்சமலை ஆற்றில் உள்ள வாடிவாசல், கேலரிகளுக்கு வர்ணம் தீட்டும் பணி நேற்று துவங்கியது.
கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மலைச்சாமி தலைமையில் நடந்தது. செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி முன்னிலையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கமிட்டியினர் கூறியதாவது: இந்த ஆண்டு சிறந்த வீரருக்கு முதல் பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கும் கார், 2ம் பரிசாக டூவீலர், சிறந்த காளைக்கு டூவீலர், 2ம் பரிசுக்கு கன்றுடன் கூடிய நாட்டுப்பசு வழங்கப்பட உள்ளது. மேலும் வீட்டு உபயோக பொருட்கள், தங்ககாசுகள் வழங்கப்படும்.
டோக்கன் நம்பர் வரிசையில் காளைகள் அவிழ்த்து விடப்படும்.
பேரூராட்சி நிர்வாக ஒத்துழைப்புடன் கூடுதல் லேரிகள் அமைக்கப்படும். மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் நேரத்திற்குள் அனைத்து காளைகளையும் அவிழ்க்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.