ADDED : மே 07, 2025 01:56 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதைக் கண்டித்து நேற்று முன்தினம் மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் திருமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போலீஸ் அனுமதி பெற்ற நிலையில் பாதையை மறித்து கூட்டம் நடத்தியதாக சிவலிங்கம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல் சுவாமி, மாவட்ட துணைத் தலைவர் சரவணகுமார், செயலாளர்கள் தமிழ்மணி, இன்பராணி, நகர தலைவர் சசிகுமார் உள்பட 85 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
