தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஹிந்து முன்னணியினர் மீதான வழக்கிற்கு தடை

 ஹிந்து முன்னணியினர் மீதான வழக்கிற்கு தடை

 ஹிந்து முன்னணியினர் மீதான வழக்கிற்கு தடை


ADDED : ஜன 28, 2026 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 12:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரத்தில், ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது, அனுமதியின்றி, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் மலையில் ஏறியதாக, திரு ப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதை எதிர்த்து ஹிந்து முன்னணியை சேர்ந்த ரகுநாத், திருமலை உள்ளிட்ட 12 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை போலீசார் நிறைவேற்றவில்லை. அதை கண்டித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். அரசியல் உள்நோக்கில் எங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டனர்.

நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை பிப்., 3க்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us