ADDED : ஜூலை 15, 2026 03:02 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி யூனியன் புளியம்பட்டி ஊராட்சி தலைவராக மணிகண்டன் 2020ம் ஆண்டு முதல் 2025 வரை இருந்தார். 2021ம் ஆண்டு டி.கல்லுப்பட்டி யூனியன் பி.டி.ஓ.,வாக இருந்தவர் ஆஷிக் 61.
அதை தொடர்ந்து பதவிவகித்த பி.டி.ஓ., அன்பரசு 55, (தற்போது உசிலம்பட்டி யூனியன் பி.டி.ஓ.,), புளியம்பட்டி ஊராட்சி செயலர் சித்ராதேவி 38, ஆகியோர் போலி ரசீது தயார் செய்து பிளான் அப்ரூவல், வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்து பணத்தை வங்கியில் செலுத்தாமல் அவர்கள் சொந்தமாக்கிக் கொண்டதாக மணிகண்டன் கொடுத்த புகாரில் மூவர் மீதும் வில்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
