/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சார் பதிவாளரை தாக்கிய வழக்கறிஞர் மீது வழக்கு
/
சார் பதிவாளரை தாக்கிய வழக்கறிஞர் மீது வழக்கு
ADDED : டிச 08, 2024 04:49 AM
பேரையூர்: பேரையூர் கே.கே.ஜி., நகரை சேர்ந்த வழக்கறிஞர்கேசவராஜ் 51. இவரது மகளுக்கு திருமண சான்றுகோரி விண்ணப்பித்திருந்தார். சார்பதிவாளர் திருப்பதி 49, நேற்று முன்தினம் மாலை திருமணச் சான்றை வழங்கினார்.
விடுமுறை நாளான நேற்று மதியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருப்பதியும், கிளார்க் சுப்ராமும்நிலுவை பணிகளை முடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அலுவலகம்வந்த கேசவராஜ் மகள் திருமணச்சான்றில் தவறு உள்ளது என கூறி திருப்பதியுடன் தகராறில் ஈடுபட்டு அலுவலக வாயிலில் இருந்த இரும்பு பூட்டை எடுத்து சார் பதிவாளர் தலையில் தாக்கினார்.
இதில் காயமடைந்த திருப்பதி பேரையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.