/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாஞ்சோலையில் வசதி நிறைவேற்ற வழக்கு
/
மாஞ்சோலையில் வசதி நிறைவேற்ற வழக்கு
ADDED : ஜூலை 12, 2025 04:29 AM
மதுரை : திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு வசதிகள் நிறைவேற்ற தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
கல்லிடைக்குறிச்சி தெற்கு அந்தோணியம்மாள் தாக்கல் செய்த மனு: களக்காடு முண்டந்துறை மாஞ்சோலை வனப்பகுதியில் ஒரு தனியார் நிறுவன தேயிலைத் தோட்டம் 1929 ல் உருவாக்கப்பட்டது. அது 2024 மே 30 ல் தொழிலாளர்களை முன்னறிவிப்பின்றி கட்டாய விருப்ப ஓய்வில் செல்ல கையெழுத்து வாங்கியது. நிறுவனம் மூடப்பட்டது. தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு குடிநீர், மின்சாரம் நிறுத்தப்பட்டது.
மாஞ்சோலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவிடக்கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அதன் குழு மாஞ்சோலையில் ஆய்வு செய்தது. அது,' குடிநீர், மின்சாரம், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ரேஷன் வினியோகம் உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்,' என 2024 டிச.2 ல் உத்தரவிட்டது. அதை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலர், திருநெல்வேலி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ்குமார் ஆஜரானார். நீதிபதி விசாரணையை ஜூலை 21 க்கு ஒத்திவைத்தார்.