ADDED : பிப் 07, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்று பாலம் அருகே ப்ரீடா ஓட்டலில் பிப்.,4 இரவு 'கிரில் சிக்கன்' சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அதிகாரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்தனர். பசும்பொன் நகர் ராஜேஷ்குமாரின் மனைவி சண்முகப்பிரியா 28, மகள் சாரா ஸ்ரீ 3, சிகிச்சையில் உள்ளார். இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் மீது சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.