ADDED : மார் 26, 2026 07:15 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை உதயசிங். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: நான்குவழிச்சாலை பணிக்காக திருமங்கலம் அருகே திரளி பெரிய கண்மாயில் மண் அள்ள ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.
விதிகளை மீறி அதிக ஆழத்தில் மண் அள்ளப்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்ய தவறிவிட்டனர். கரை பலவீனமடைந்துள்ளது. கண்மாயை பாதுகாக்க மண் அள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு கலெக்டர், கனிமவள உதவி இயக்குனர், திருமங்கலம் தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஏப்.2 க்கு ஒத்திவைத்தது.
