/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்க வழக்கு
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்க வழக்கு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்க வழக்கு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்க வழக்கு
ADDED : ஆக 02, 2025 01:34 AM
மதுரை: மதுரை அப்துல் ரஹ்மான் ஜலால். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், நர்ஸ்கள் பற்றாக்குறை உள்ளது. கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' கருவியை இயக்க பயிற்சி பெற்ற டாக்டர், ரேடியாலஜிஸ்ட் இல்லை. ஸ்கேனை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். டாக்டர், நர்ஸ், சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கர்ப்பிணிகள், நோயாளிகள் பயன்பாட்டிற்கு போதிய கட்டட வசதி செய்ய வலியுறுத்தி தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். நீதிபதிகள்,'மனுவை அதிகாரிகள் 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.