/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை ரயில்வே ஜங்ஷனில் பணம், நகை பறிமுதல்
/
மதுரை ரயில்வே ஜங்ஷனில் பணம், நகை பறிமுதல்
ADDED : ஆக 02, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ரயில்வே ஜங்ஷன் முதல் பிளாட்பாரம் பார்சல் அலுவலகம் அருகில் நேற்று மாலை சந்தேகத்திற்குரிய வகையில் திரிந்த இரு வாலிபர்களை ரயில்வே பாதுகாப்பு போலீசார் கவனித்தனர்.
அவர்களை விசாரித்ததில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தன்மய் ஹரிதாஸ் சலுங்கே 21, கோவில்பட்டியைச் சேர்ந்த சந்தனராஜ் 29, என தெரிந்தது. இருவரும் கோவில்பட்டியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் பைகளை சோதனை செய்ததில் ரூ.75 ஆயிரம் மற்றும் 450 கிராம் தங்க நகைகள், அலைபேசிகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி வருமான வரித்துறை துணை இயக்குநரிடம் ஒப்படைத்தனர்.
வாலிபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.